விஜய்யின் வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் குஷ்பூ அதோடு தனது கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் இவர் அதன் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது சுந்தர் சி இயக்கி வரும் காபி வித் காதலை இவர் தான் தயாரிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினியை சந்தித்த குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், one and only SuperStarஐ சந்தித்ததில் மகிழ்ச்சி. ஒரு டீயும், கொஞ்சம் சிரிப்பும் என்னை மகிழவைத்துள்ளது என்றுள்ளார். உங்கள் பொன்னான நேரத்தை என்னுடன் செலவிட்டமைக்கு நன்றி சார். பார்க்கவே Amazingஆக உள்ளீர்கள் என்ற குஷ்புவின் ட்விட்டுக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.