கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் நான் ஒரு பயணத்தை நடத்தினேன்.அந்தப் பயணத்தை நடத்தும் போது ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் நேரடியாக வந்து மனுக்களை கொடுக்கலாம்.
மேடையிலே ஒரு பெட்டி வைத்திருப்போம். அந்த பெட்டியில் இந்த மனுக்கள் எல்லாம் போடப்படும். நேரடியாக வந்து மனுக்களை கூட போடவேண்டிய அவசியம் இல்ல. வருகின்ற வாசலில், நுழைவாயில்ல கிட்டத்தட்ட 100 இளைஞர்கள் டேபிள் போட்டு, சேர் போட்டு ரிஜிஸ்டர் பண்ணி, அதற்கு எல்லாம் பெற்றுக்கொண்டு, அதற்குப் பிறகுதான் அந்த பெட்டிக்கு வந்து சேர்ந்தது.
அந்த பெட்டியை அந்த மக்களுக்கு முன்னாலையே அதை, பூட்டி ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள்ளாகவே இவையெல்லாம் தீர்த்து வைக்கிற முயற்சி நான் ஈடுபடுவேன் என்று உறுதி தந்தேன். நாம் ஆட்சிக்கு வந்தோம், ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, அந்த பெட்டிகள் எல்லாம் கோட்டைக்கு வந்தது. அதற்கு என்று ஒரு துறையை உருவாக்கப்பட்டது.
அதற்கென்று ஐஏஎஸ் நிலையில் இருக்கின்ற ஒரு உய அதிகாரி நியமிக்கப்படுகிறார். ஒரு குழு நியமிக்கப்படுகிறது. அதையெல்லாம் பிரித்துப் பார்க்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, ஆராய்ந்து, எந்தெந்த பணிகள் எல்லாம் உடனுக்குடன் முடிக்கணுன்னு திட்டமிட்டு, ஆக அப்படி வழங்கப்பட்டிருக்கக்கூடிய மனுக்களில் 70% அத்தனையும் நிறைவேற்றித் தரப்பட்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு குறிப்பிட்டு சொல்கின்றேன்.
அதற்கென்று ஒரு இலாக்கா, அதற்கென்று ஒரு அதிகாரி, ஒரு கண்ட்ரோல் ரூம்மே வச்சி இருக்கின்றோம். நான் அடிக்கடி அந்த இடத்துக்கு போய், ஆய்வு செய்வது உண்டு எவ்வளவு மனுக்கள் வந்து இருக்கு ? எவ்வளவு மனுக்கள் தீர்வு காணப்பட்டது ? எவ்வளவு மனுக்கள் என்ன பிரச்சனையில் இருக்கு ? என்ன நிலையில் இருக்கு ? ஏன் தீர்வு காணப்படல ? என்ன காரணம் ? என்பதை எல்லாம் பற்றி 15 நாளைக்கு ஒருமுறை அங்கே சென்று ஆய்வு நடத்திக் கொண்டிருக்கின்றேன் என நம்பிக்கையூட்டினார்.