Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண நாளன்று…. கோர விபத்து….. மணமகன்… மணமகள் படுகாயம்….. திருப்பத்தூர் அருகே சோகம்…!!

திருப்பத்தூரில் திருமணம் நடைபெற இருந்த நாளன்று மணமகன் மணமகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை அடுத்த கோடியூரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் ஆம்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அமலா என்பவரை சிலம்பரசன் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க, இருதரப்பு வீட்டார்களும் முடிவு செய்து செய்த நிலையில்,

நேற்றைய தினம் திருப்பதியில் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் அதிகாலையில் ஆம்பூரில் இருந்து தனது தாயார் முனியம்மாள் மற்றும் அன்று மனைவியாக இருந்த அமலா ஆகியோரை ஒரே மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் நோக்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று அவர்கள் மீது மோதியதில் கீழே விழுந்த மூவரும் படுகாயமடைந்தனர். இதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மணமகன் மணமகள் மணமகனின் தாயார் மூவரும் அதில் ஏற்றி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |