உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் சென்ற கோ ஏர் விமானத்தில் உபி.யைச் சேர்ந்த ஆயுஷி என்ற சிறுமி தனது தந்தையுடன் பயணித்தார். விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் ஆயுஷிக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட ஆரம்பித்தது. பின்னர் விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அச்சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ரத்தத்தில் ஒருவருக்கு சராசரியாக 12 கிராமுக்கும் அதிகமாக ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். 10 கிராமுக்கு குறைவாகவும் இருந்தால் இரத்த சோகை ஆக மாறும். இவர்களுக்கு விமான பயணத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம். இவ்வாறு உள்ளவர்கள் விமான பயணம் செய்யக்கூடாது. அதிலும் ஆயுஷிக்கு 2.5 கிராம் என்ற மிக மோசமான ஹீமோகுளோபின் குறைபாடு இருந்து உள்ளதால் அவர் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.