Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தீபாவளி அன்று – Wow வேற லெவல் அறிவிப்பு….போடுடா வெடிய

நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. கொரோனா  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படத்தின் வெளியீடு தாமதமாகி உள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது தீபாவளிக்கு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாஸ்டர் படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியிடப்படும் என மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தீபாவளிக்கு மாஸ்டர் படம் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய படங்களை வெளியிட அனுமதிக்கப்படாத சூழலில் விஜய் ரசிகர்களை மகிழ்விக்க படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |