Categories
தேசிய செய்திகள்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா..!!

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமெடுத்துக் கொண்டே வருகிறது.. இந்த கொடிய வைரஸ் சாதாரண மக்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களையும் தாக்கி வருகிறது.. அந்த வகையில், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது, வழக்கமான பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு வருகை தந்தபோது, ​​நான் இன்று COVID19 சோதனை செய்தேன். அதில் பாசிட்டிவ் என வந்துள்ளது.. கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட நபர்களை, தயவுசெய்து தனிமைப்படுத்தவும், கோவிட் -19 க்கு சோதனை செய்யவும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்..

கடந்த வாரங்களில் பிரணாப் முகர்ஜியை சந்திப்பதற்காக நிறைய பேர் வந்திருக்கிறார்கள்.. அவர்களை தொடர்பு கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. பிரணாப் முகர்ஜிக்கு 85 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |