Categories
உலக செய்திகள்

OMIKRAN: சிங்கப்பூரில் இனி 4 வாரங்களுக்கு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சிங்கப்பூரில் ஒமிக்ரான் தொற்று காரணமாக நான்கு வாரங்கள் புதிய விமானம் டிக்கெட் முன்பதிவுகள் நிறுத்தி வைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒமிக்ரான் தொற்று காரணமாக டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 20 வரை புதிய டிக்கெட் முன்பதிவுகளை நிறுத்தி வைக்க சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 24 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் 4 வாரங்களுக்கு புதிய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையில் முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வைத்தவர்கள் பயணிக்க அனுமதி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |