ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.
தென்னாப்பிரிக்க நாட்டில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முதன் முதலில் தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்யா தற்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் தடுப்பூசி கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பாக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் தான் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கும் தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளது. இதுகுறித்து கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அலெக்சாண்டர் ஜிண்ட்ஸ்பர்க் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதாவது “தற்போது பயன்பாட்டில் உள்ள பிரதான தடுப்பூசியை மாற்றுவதற்கான காரணம் எதுவும் இல்லை எனவும் முந்தைய அனைத்து உருமாற்றங்களுக்கும் எதிராக இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.