Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: கல்யாணத்துக்கு முட்டுக்கட்டை போட்டுட்டு…. நீதிமன்றம் சொன்ன புதிய தீர்ப்பு….!!!!

கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர்களான ரின்டு தாமஸ் மற்றும் அனந்தகிருஷ்ணன் ஹரிகுமாரன் நாயர் ஆகிய இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி திருமண கொண்டாட்டம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரசால் இந்த ஜோடியின் திருமணத்திற்கு பெரிய முட்டுக்கட்டை ஏற்பட்டது. தற்போது மேல் படிப்புக்காக ஹரிகுமாரன் நாயர் இங்கிலாந்து சென்றுள்ளார். டிசம்பர் 23-ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக டிசம்பர் 22-ம் தேதி ஹரிகுமாரன் நாயர் இந்தியா திரும்ப விமான பயணத்திற்கு புக் செய்திருந்தார்.

ஆனால் ஒமிக்ரான் பரவல் காரணமாக அவரது விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் ஹரிகுமாரன் நாயர் அங்கிருந்தபடியே கேரள ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தன்னுடைய நிலையை விளக்கிச் கூறி நான் ஆன்லைனில் திருமணம் செய்யவுள்ளதாகவும், இந்த திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் அனுமதி கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி நாகரேஷ், “கொரோனா தொற்று காரணமாக நேரில் வர முடியாவிட்டாலும் கூட, இவர்களின் ஆன்லைன் திருமணம் சட்டப்படியானது ஆகும்.

இந்த திருமணத்தை திருவனந்தபுரம் திருமணம் துணைப் பதிவாளர் அலுவலகமானது சட்டப்படியானதாக அங்கீகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் ஆன்லைனில் திருமணம் செய்து கொள்வதால் தவறு ஒன்றும் இல்லை” என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். எனினும் திருமணத்துக்கு பின் இருவரும் நேரில் ஒருமுறை வந்து துணைப் பதிவாளர் முன்பு தங்களது அடையாளங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் திருமணப் பதிவாளர் ஒருவரே திருமண தேதியை நிர்ணயம் செய்து அந்த ஆன்லைன் திருமணத்தை நேரில் பார்த்து அவர்களின் திருமணத்தைப் பதிவு செய்யவுள்ளார்.

Categories

Tech |