Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்று”…. மீண்டும் ஊரடங்கு அமல்…. பிரபல நாட்டில் வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சிய்யான் நகரில் 52 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் சீனா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சீன நாட்டில் உள்ள சிய்யான் நகரில் 52 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக செல்பவர், 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2019- ம் ஆண்டு உகான் நகரில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குக்கு பின் மிக கடுமையான ஊரடங்காக தற்போது ஷியான் நகரில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |