Categories
உலக செய்திகள்

ஓமிக்ரான்: 5 ஆவது அலை பரவுமா…? பீதியான பிரதமர்… பிரபல நாட்டில் எழுந்த கேள்வி….!!

தென்ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் குறித்து இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நாப்தாலி அச்சம் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளதுக். இந்த ஓமிக்ரான் அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பரவி அனைவருக்கும் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நாப்தாலி பென்னட் தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொடர்பாக அச்சம் தெரிவித்துள்ளார்.

அதாவது தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய நாப்தாலி பென்னட் இஸ்ரேலில் கொரோனாவின் 5 ஆவது அலை பரவி விடுமோ என்ற அச்சம் தனக்கு எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஏனெனில் தற்போது இஸ்ரேலில் 134 பேருக்கு உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமின்றி 307 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையினால் இனி வரும் காலங்களில் ஓமிக்ரான் தொற்று மிக வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாலயே தனக்கு மேல் குறிப்பிட்டுள்ள அச்சம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |