அமெரிக்காவில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளதாகவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் அமெரிக்காவிலுள்ள 32 மாநிலங்களில் பரவியுள்ளது. இந்த ஓமிக்ரானை கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசிகளால் தடுக்க முடியாது என்று அமெரிக்க நாட்டின் மூத்த விஞ்ஞானியான ஆண்டனி ஃபவுசி என்பவர் தெரிவித்துள்ளார்.