இங்கிலாந்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக 101 பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் உருவமடைந்த கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 2 நாளுக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவால் 101 பேர் பாதிக்கப்பட்டவர்கள். ஆகையினால் அந்நாட்டில் மொத்தமாக ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 437 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் 45,691 நபர்கள் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனையடுத்து அமெரிக்காவின் உயர் விஞ்ஞானியான அந்தோணி பாசி என்பவர் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவக்கூடிய தன்மையில் இருந்தாலும் கூட அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.