வெளிநாடுகளிலிருந்து தைவான் நாட்டிற்குள் நுழைந்த 3 பேருக்கு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் மிக வேகமாக உலக நாடுகளுக்கு பரவி வருகிறது.
இந்நிலையில் தைவான் நாட்டிற்குள் வெளிநாடுகளிலிருந்து நுழைந்த 3 பேருக்கு தற்போது புதிதாக உருமாற்றமடைந்துள்ள ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகையினால் புதிதாக உருமாற்றமடைந்துள்ள ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.