தென் ஆப்பிரிக்காவிலிருந்து நவம்பர் 19ஆம் தேதி மலேசியா திரும்பிய சிங்கப்பூரில் கல்வி பயிலும் இளம் மாணவிக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் நவம்பர் 19ஆம் தேதி சிங்கப்பூரில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் மலேசியாவிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மலேசிய நாட்டின் சுகாதாரத்துறை நவம்பர் 11 முதல் 28ஆம் தேதி வரை வெளிநாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு பயணம் செய்திருக்கும் நபர்களில் எவருக்கெல்லாம் கொரோனா உறுதியானதோ அவர்களுடைய மாதிரிகளை மரபணு பரிசோதனை செய்துள்ளது.
அந்த மரபணு பரிசோதனையில் தான் மேல் குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரில் கல்வி பயிலும் 19 வயது மாணவிக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை மலேசிய நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான ஹெயிரி வெளியிட்டுள்ளார்.