உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் டெல்டா வகை கொரோனா வைரஸ் விட 3 மடங்கு அதிகமாக பரவக்கூடியது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஒமைக்ரான் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கிவிட்டது. தற்போது 227 பேருக்கு பாதித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச நிறுவனங்களையும் உஷார்படுத்தி மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் தேசிய அளவில் ஒமைக்ரான் தொற்று பரவுவதை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து பிரதமர் மோடி டெல்லியில் இன்று சுகாதார நிபுணர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் வி. கே. பால் மற்றும் சுகாதார நிபுணர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்துகு பின்னர் ஒமைக்ரானை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்.