அமெரிக்காவில் நிபுணர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மேற்கொள்ளப்படும் பயணம் காரணமாக ஒமிக்ரான் தொற்று அதிகரிக்கும் என்று எச்சரித்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது சுமார் 89 நாடுகளில் பரவி வருகிறது. எனவே உலக நாடுகள் ஒமிக்ரானை தடுக்க பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான அந்தோணி பவுசி இதுகுறித்து கூறியிருப்பதாவது, “ஒமிக்ரான் பரவல் வேகமாக பரவும்.
தற்போது உலக நாடுகளில் பரவி கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மேற்கொள்ளப்படும் பயணங்களினால் ஒமிக்ரான் பரவல் மேலும் அதிகரிக்கும். எனவே, வரக்கூடிய வாரங்களில் மருத்துவமனைகளில் சிக்கலான நிலை உண்டாகும். ஒமிக்ரான் பாதிப்பு, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கும், செலுத்தாவர்களுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாட்டுடன் இருக்கும். எனவே அனைவரும் தடுப்பு செலுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.