தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்படும் முன்பே நெதர்லாந்தில் பரவிவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஓமிக்ரோன் வைரஸ் முதல் தடவையாக கண்டறியப்பட்டது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டில் நவம்பர் 19 மற்றும் 23ம் தேதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட இரண்டு நபர்களுக்கு ஓமிக்ரோன் பாதிப்பு இருந்திருக்கிறது என்பது, தற்போது தெரியவந்திருக்கிறது.
இது மட்டுமல்லாமல், ஜெர்மன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் முன்பே ஓமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனினும் தற்போது வரை, ஓமிக்ரோன் தொற்று ஏற்பட்டு எவரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.