Categories
உலக செய்திகள்

“இதோடு 47-ஆவது நாடு!”… மற்றொரு பிரபல நாட்டிலும் பரவியது ஒமிக்ரான்….!!

தாய்லாந்து நாட்டில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ், இந்தியா உட்பட சுமார் 46 நாடுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த, பல நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது 47 வது நாடாக தாய்லாந்திலும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஸ்பெயினிலிருந்து, கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று அமெரிக்காவைச் சேர்ந்த நபர் தாய்லாந்திற்கு வந்திருக்கிறார். அந்த நபருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. எனவே, ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நபரை மட்டும் தனிமைப்படுத்தியிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |