சவுதி அரேபியாவிலும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. எனவே உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனினும், ஐரோப்பிய நாடுகளிலும், இந்த தொற்று பரவ தொடங்கிவிட்டது. இந்நிலையில் சவுதி அரேபியாவிற்கு, ஒரு நபர் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கிறார்.
அவருக்கு, ஓமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, அவரையும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களையும், தனிமைப்படுத்தியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.