அமெரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான், தற்போது பல நாடுகளில் பரவியிருக்கிறது. எனவே, உலக நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க நாட்டிலிருந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு வந்த ஒரு நபருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது, அந்த நபரையும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நாட்டில் மக்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.