நேபாளத்தில் இரண்டு நபர்களுக்கு ஓமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில், கடந்த மாதம் 24ஆம் தேதியன்று கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்று தற்போது, 30 க்கும் அதிகமான நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, போக்குவரத்தில் பல்வேறு நாடுகளும், கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நேபாள அரசு ஹாங்காங், ஜிம்பாப்வே, லெசோதா, நமீபியா, தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக், மலாவி மற்றும் எஸ்வதினி போன்ற 9 நாடுகளுக்கு பயணத்தடை அறிவித்தது.
எனினும், அந்நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மட்டும் அவசர தேவைகளுக்காக தங்கள் நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு இரண்டு நபர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியிருக்கிறது. எனவே, நேபாள அரசு கட்டுப்பாடுகளை அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.