Categories
உலக செய்திகள்

OMICRON : தொற்று பாதிக்கப்பட்டவர்களில்…. 82 % பேருக்கு…. அமெரிக்க விஞ்ஞானி சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஹெல்த் மெட்ரிக் சயின்ஸ் துறையின் தலைவரும், ஐஹெச்எம்இ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனருமான கிறிஸ்டோபர் முர்ரே ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் பரபரப்பு தகவல்கள் சிலவற்றை கூறியுள்ளார். அதாவது ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு உயிரிழப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் ஆகியவை குறைவாகவே இருக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்டாவை ஒப்பிடுகையில் ஒமிக்ரான் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும். அதேபோல் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 82 சதவீதம் பேருக்கு அறிகுறிகளே இல்லை என்று கிறிஸ்டோபர் கூறியுள்ளார். இருப்பினும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம். ஆனால் ஒமிக்ரானால் ஏற்படும் உயிரிழப்பு என்பது குறைவு தான் என்று கிறிஸ்டோபர் முர்ரே தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |