தமிழ்நாட்டில் தற்போது வரை யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியானால் அது ஒமைக்ரான் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மரபியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அது ஒமைக்ரான் பாதிப்பு. மேலும் இன்று நடந்த 13வது தடுப்பூசி முகாமில் இதுவரை 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதற்கு முன்வர வேண்டும். தடுப்பூசி மட்டுமே கொரோனா எதிர்த்து போராடக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.