இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் தொற்று இந்தியாவை பாதிக்குமா? என்பது 6 முதல் 8 வாரங்களில் தெரியும் என்று மும்பையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான ஒமைக்ரான் பாதிப்பு பயணம் தொடர்பானது. தடுப்பூசி செலுத்தும் பணியை விரைந்து முடிப்பதில் அனைத்து மாநில அரசுகளும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இதுவரை இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேருக்கும், கர்நாடகாவில் இரண்டு பேருக்கும், குஜராத் டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு என இந்தியா முழுவதும் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.