Categories
மாநில செய்திகள்

Omicran: தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்…. முதல்வர் எடுக்கும் முக்கிய முடிவு…!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்த நிலையில் பழையபடி  மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனிடையே உலகம் முழுவதும் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்திலும் நுழைந்துள்ளது. ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேருக்கு தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் புகுந்துள்ளதால் பள்ளிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் சொல்வதை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் காதுகொடுத்து கேட்கவேண்டும். அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்று வாயடைத்து விட வேண்டாம். அவர்கள் செய்தால் அதன் பிறகு மாணவர்களிடம் இருந்து எதையும் பெற முடியாது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு மாதிரி தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. டிசம்பர் 25ஆம் தேதி முதல்வர் தலைமையில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |