தென்ஆப்பிரிக்காவில் கண்டறியபட்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வெகு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் நுழைந்துள்ளது. அதன்படி மும்பை நகரில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது . மேலும் அதிக கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது. மும்பையில் இதுவரை 13 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
ஏற்கனவே மும்பையில் ஒமைக்ரானை தடுப்பதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து தற்போது மும்பைக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும் அல்லது புதிதாக கண்டுபிடிக்கப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நெகட்டிவ் சான்று கொண்டு வந்தால் மட்டுமே அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் எதுவும் நடக்க அனுமதி இல்லை. கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடவும் அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.