தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- பாடலான ரஞ்சிதமே தீ தளபதி போன்றவைகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வாரிசு திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணி மற்றும் காலை 8 மணி காட்சிகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த 3 காட்சிகளுக்கு மட்டும் தளபதியின் வாரிசு திரைப்படத்திற்கு டிக்கெட் விலையை ரூபாய் 500 ஆக நிர்ணயத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பீஸ்ட் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை விட வாரிசு திரைப் படத்தின் முதல் நாள் வசூல் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த டிக்கெட் கட்டண உயர்வு ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.