பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், அறிமுக இயக்குனர் யுவன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சசிகுமார் மற்றும் வீரமணி ஆகியோர் இணைந்து தயாரிக்க, நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி முத்து, ரமேஷ் திலக், நடிகை தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அஜீஸ் அசோக் என்பவர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. மேலும் சென்னையில் நடைபெறும் படத்தின் ஆடியோ லான்ச் விழாவிற்கு நடிகை சன்னி லியோன் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.