மெக்சிகோ நாட்டில் ஒரு பெண் குழந்தை வாலுடன் பிறந்த அதிசயம் நடந்துள்ளது. இந்த வால் 5.7 செ.மீ நீளம் இருக்கிறது. இந்த வால் தோல் மற்றும் முடியால் உருவான நிலையில் மிகவும் மிருதுவாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி வாலுடன் குழந்தை பிறப்பது இது 200-வது முறையாகும். ஆனால் ஆண் குழந்தைகள் மட்டுமே பெரும்பாலும் வாலுடன் பிறந்த நிலையில், தற்போது தான் முதல் முறையாக பெண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு வால் இருந்ததே தவிர மற்றபடி ஆரோக்கியத்தில் எவ்வித குறையும் இன்றி நல்ல முறையில் பிரசவம் நடந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து உலகத்தில் 195 பேருக்கு பிறக்கும்போது வால் இருந்துள்ளது. பொதுவாக குழந்தை கருவில் உண்டாகும் போது வால் முளைக்குமாம். ஆனால் தானாகவே அந்த வால் உள்ளே சென்று விடும் என்று கூறப்படும் நிலையில், சிலருக்கு உள்ளே செல்லாமல் இருப்பதால்தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் தற்போது வாலுடன் பிறந்த பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலமாக வாலை அகற்றி விடலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.