பொதுவாக குழந்தைகள் என்றாலே எந்த பொருளை எடுத்தாலும் உடனடியாக வாயில் போட்டு விடுவார்கள். எனவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் பொருட்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். குழந்தைகள் எளிதில் எடுத்து வாயில் போட்டு விழுங்கக்கூடிய பொருட்களை அவர்கள் கைகளில் கொடுக்காததோடு அவர்களுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் எதையும் எடுத்து வாயில் போட்டு விழுங்க மாட்டார்கள்.
இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை டிவி பேட்டரியை வாயில் போட்டு விழுங்கியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றிலிருந்த பேட்டரியை அகற்றி உள்ளனர். மேலும் உரிய நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.