Categories
தேசிய செய்திகள்

OMG…! 2 ஆண்டுகள் வீட்டில் பூட்டி வைத்து…. இளம்பெண் பாலியல் வன்கொடுமை…. கொடூர நண்பன் கைது…!!!!

நண்பர் ஒருவர் கணவரை பிரிந்த இளம் பெண்ணை 2 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தயுள்ளது.

பெங்களூரு மாநிலத்தில் கங்கமனகுடியில் 27-வயது இளம்பெண் ஒருவர் கணவரை தன்னுடைய குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். அந்த இளம்பெண் 10 வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நண்பர் எசருகாட்டாவில்உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த வீட்டிலேயே சிறை வைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன் அந்த பெண்ணை விடுவித்துவிட்டார். இருப்பினும் அந்த இளம் பெண்னை விடுவித்த பின்னும் அவரை தொடர்பு கொண்டு, அவர் சில நண்பர்களிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறி அந்த கடனை அடைப்பதற்காக அவர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு அவரை தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் கங்கமனகுடி போலீசிடம் புகார் அளித்ததன் பேரில் அந்தப் பெண்ணின் நண்பர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |