பாகிஸ்தானில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தால் விவசாயிகள் பயிரிட்ட அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் மக்கள் தாங்கள் 50 ஆண்டுகள் பின்னோக்கி வந்து விட்டதாக கூறினர்.
இந்நிலையில் தற்போது இந்த மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதுவரை இந்த மழையினால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மட்டும் சிறுவர்கள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வெள்ளத்தில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 1 லட்சத்து 693 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.