Categories
தேசிய செய்திகள்

OMG: வகுப்பறையில் வந்த சண்டை…. மயங்கி விழுந்த மாணவர்…. பின்னர் காத்திருந்த அதிர்ச்சி…!!!

வகுப்பறையில் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட சண்டையில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யூசுப்க்குடா என்ற பகுதியில் சாய் குரூடா உயர்நிலை பள்ளி எனும் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியில் நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலர் உணவு இடைவேளையின் போது காகிதத்தாலான பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மன்சூர் என்ற மாணவன் தனது வகுப்பில் பயிலும் சக மாணவன் மீது பந்தை வீசியுள்ளார்.

இதனால் மன்சூனுக்கும்  அந்த மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அந்த மாணவன் தனது மற்றொரு நண்பருடன் சேர்ந்துமன்சூனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த மாணவன் மன்சூரை மேஜையின் மீது  தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மன்சூர் மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து ஆசிரியருக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் மாணவன் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக மன்சூரை  மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து இறந்து விட்டார் என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மன்சூரை  தாக்கிவிட்டு பள்ளியில் இருந்து தப்பியோடிய சக மாணவர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |