இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு லாட்டரி மோசடியில் ஈடுப்பட்ட விவகாரத்தில் 28 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்தின் வடக்கே லீட்ஸ் நகரில் இந்திய பெண் நரேந்திர கில் என்பவர் வணிக வளாகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் 81 வயது முதியவர் ஒருவர் அந்த வணிக வளாகத்தில் இருந்து லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி சென்றார். இதனை தொடர்ந்து அந்த லாட்டரி சீட்டுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 31 லட்சம்) பரிசு விழுந்துள்ளது. இதற்கிடையில் இந்தப் பரிசுத் தொகையை அபகரிக்கும் எண்ணத்தில் நரேந்திர கில் லாட்டரி சீட்டுக்கு பரிசுத்தொகை பெறவில்லை என்று அந்த முதியவரிடம் போய் கூறியுள்ளார்.
இதற்குப் பின்னர் அந்தப் பெண் லாட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பரிசு வென்ற லாட்டரி சீட்டு தன்னிடம் இருக்குமாறு கூறி உள்ளார். இருப்பினும் அவரது பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதால் லாட்டரி நிறுவனம் சீட்டை வாங்கியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் நரேந்திர கில் மோசடியில் ஈடுபட முயன்றதது தெரியவந்த நிலையில் அவர் மீது மோசடி வழக்கு போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி நரேந்திர கில் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதால் 28 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.