Categories
உலக செய்திகள்

OMG: ரஷ்ய வீரரை வாகனத்தில் இருந்து இழுத்தெறிந்த போலீஸ்…. வெளியான பரபரப்பு வீடியோ…..!!!!!

ரஷ்யவீரரை போர் வாகனத்தில் இருந்து காவல்துறையினர் இழுத்தெறிந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

உக்ரைன் மீது தொடர்ந்து படையெடுத்து வரும் ரஷ்யா அந்நாட்டின் துறைமுக நகரான Odesa மீது பயங்கர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் புடினின் நட்பு நாடான பெலாரஸில் இருந்து ரஷ்யபடைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைனியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் உக்ரைனில் கொள்ளையடித்த பொருட்களை பெலாரஸில் சந்தை அமைத்து ரஷ்ய ராணுவம் விற்பதாக உக்ரைன் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் ரஷ்ய வீரரை போர்வாகனத்தில் இருந்து பெலாரஸ் காவல்துறையினர் இழுத்தெறிந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

இது தொடர்பான சம்பவம் எங்கே எப்போது நடைபெற்றது என்ற விவரங்கள் தெரியவில்லை. இணையத்தில் வெளியாகிய வீடியோவில் ரஷ்யாவின் போர் வாகனங்களை குறிக்கும் வி என குறியிடப்பட்டிருக்கும் டிரக்கை வழி மறிக்கும் காவல்துறையினர், அதற்குள் உள்ள நபரை வாகனத்தில் இருந்து இழுத்தெறிந்து, சாலையில் போட்டு கைது செய்கின்றனர். இதற்கிடையில் அந்த வாகனத்தை ஓட்டிவந்த நபர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பான விபரங்கள் ஏதும் தற்போது வரையிலும் வெளியாகவில்லை.

Categories

Tech |