ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளதாக பிரிட்டன் முன்னாள் உளவாளி தகவல் தெரிவித்துள்ளார். ரத்த புற்றுநோயால் புதின் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமான நபர் தகவல் தெரிவித்துள்ளார். புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், அதோடு வேறு சில பாதிப்புகளும் அவருக்கு இருப்ப தாகவும் தெரிவித்துள்ள அவர்,ஆட்சியில் இருந்து அவரைக் அதற்கான முயற்சிகளும் மறைமுகமாக அந்த நாட்டில் நடைபெற்று வருவதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து புதிரின் உடல்நிலை பாதிப்பு குறித்த தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. புதின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டது. ரஷ்யாவின் பொருளாதாரத்தை மட்டுமல்லாது உக்ரைனின் பொருளாதாரத்தையும் உலக பொருளாதாரத்தையும் அளித்தவர் புதின் என்றும் இந்த போருக்கு காரணம் குழம்பிப் போன அவரது மூளை தான் என்றும் ரசிய அதிபர் மாளிகையில் புதினுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஒரு குழு தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.