Categories
சினிமா

OMG: மேடையில் பாடும் போதே பிரபல பாடகர் திடீர் மரணம்…. மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ…..!!!!

மலையாள திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வந்தவர் எடவா பஷீர்(78). இவர் மலையாள மொழி திரைப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார். மேலும் இவர் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்தார். இந்நிலையில் கேரளாவிலுள்ள ஆலப்புழையில் பத்திரப்பள்ளி எனும் இடத்தில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. “ப்ளூ டைமண்ட்ஸ்” எனும் இசைக்குழுவின் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று பாடகர் எடவா பஷீர் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எடவா பஷீர் பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் பாடிய ஒரு இந்திபாடலலை மேடையில் ரசித்து மெய் மறந்து பாடிக் கொண்டிருந்தார். இந்தநிலையில் திடீரென்று எடவா பஷீர் மேடையில் மயங்கி கீழே சரிந்தார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் எடவா பஷீரை விரைந்து அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், எடவா பஷீர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதாவது எடவா பஷீருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மேடையிலேயே இறந்தார் என கூறப்படுகிறது. அவரது மறைவிற்கு மலையாளம் திரை உலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்பின் எடவா பஷீரின் உடல் ஆலப்புழையிலிருந்து அவருடைய சொந்த ஊரான கொல்லம் கடப்பக்கடாவுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு வைத்து அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்படும் என கூறப்படுகிறது. இவ்வாறு மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போதே பாடகர் எடவா பஷீரின் திடீர் மறைவால் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், திரையுலகினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Categories

Tech |