Categories
சென்னை மாநில செய்திகள்

OMG: மெட்ரோ ரயில் கதவில் குழந்தையுடன் சிக்கிய பெண்…. சென்னையில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலின் கதவுகள் சரியாக இயங்காத காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர் .சமீபத்தில் உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் ஏறி உள்ளார்.அப்போது தானியங்கி கதவுகள் மூடியதால் தன் குழந்தையோடு கதவுகளுக்கு இடையே அவர் சிக்கிக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் மேலும் இருவர் கதவுகளுக்கு நடுவே மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் ஓட்டுனரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனை கண்டித்து பொதுமக்கள் ஒன்றுகூடி புது வண்ணாரப்பேட்டையில் உள்ள ரயில் நிலையத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மெட்ரோ ரயில் கதவுகள் சரியாக இயங்காமல் பல்வேறு விபத்துக்கள் நடந்துள்ளது சென்னையில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |