முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுக்ராம் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 94. இந்திய தேசிய காங்கிரஸ் அரசில் பணியாற்றிய இவர் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக பணியாற்றி வந்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த மண்டி மக்களவை தொகுதியில் 5 முறை சட்டப்பேரவை தேர்தலிலும் மூன்று முறை மக்களவைத் தேர்தலிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
OMG: முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!
