நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக அதிக விலைக்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இதனையடுத்து மராட்டிய மாநிலத்தில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மின் கட்டணம் அதிகரிக்க உள்ளது. அதாவது யூனிட்டுக்கு சுமார் ஒரு ரூபாய் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மின் கட்டண உயர்வு காரணமாக மும்பை பெருநகர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே கேஸ் சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சார கட்டண உயர்வும் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதலில் மின்கட்டணம் அதிகரிக்காதது நிம்மதியாக இருந்தது. ஆனால் தற்போது மின் கட்டணம் அதிகரிக்க இருப்பதால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.