பெங்களூருவிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதன் காரணமாக மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என சோதனை நடத்துமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு, ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளி கூட்டமைப்பு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் படி மாணவர்களின் பைகளை ஆசிரியர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சில தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அப்பைகளில் சிகரெட்டு, செல்போன், ஆண் உறைகள் மற்றும் போதைப் பொருட்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதுபோன்று ஒரு மாணவியின் பையிலிருந்து ஆணுறை, வாய்வழி கருத்தடை மருந்துகள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த மாணவியிடம் கேட்டபோது, தன் நண்பர்கள் தனக்கு தெரியாமல் பையில் ஆணுறைகளை போட்டதாக கூறினார்.
அதன்பின் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து ஆசிரியர்கள் இதுகுறித்து தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அழுது புலம்பினர். அதன்பின் மாணவர்களை கவுன்சிலிங் அழைத்து செல்லும்படி ஆசிரியர்கள், பெற்றோருக்கு அறிவுறுத்தினர். அத்துடன் கவுன்சிலிங் போகும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் 10 நாட்கள் விடுமுறையும் வழங்கி இருக்கிறது.