Categories
தேசிய செய்திகள்

OMG!…. மருத்துவரை நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு…. காத்திருந்த பேரதிர்ச்சி…. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் பஸ்தி பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியையாக பணிபுரிந்துவரும் இளம்பெண் ஒருவருக்கு, சமூகவலைதளம் வாயிலாக அதே பகுதியை சேர்ந்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்களாயினர். அதன்பின் அப்பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என்று அந்த மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த அப்பெண் தனியாக மருத்துவரை சந்திக்க சென்ற வாரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அப்பெண்ணை தன்னுடன் ஹாஸ்டலுக்கு வரும்படி அந்த மருத்துவர் வற்புறுத்தி அழைத்துள்ளார். அதன்படி அப்பெண் அவருடைய ஹாஸ்டலுக்கு சென்றார். இந்நிலையில் அங்கு அந்த மருத்துவரின் 2 நண்பர்கள் காத்திருந்தனர். அதன்பின் அந்த பெண்ணை ஓர் அறையில் அடைத்து மருத்துவர்கள் 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் லக்னோ காவல் நிலையத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி புகார் அளித்தார். அதன்பின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |