சென்னை எண்ணூர் அருகே நெட்டுக்குப்பம் பகுதியில் சிறுவர்கள் 7 பேர் குளிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். அங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்த அந்த சிறுவர்களை திடீரென எழுந்த ராட்சத அலை ஒன்று கடலுக்குள் இழுத்துச் சென்றது. அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அந்த சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் நான்கு சிறுவர்கள் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு சிறுவன் கடலில் மாயமானதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே பெற்றோர்கள் அனைவரும் பிள்ளைகளை வெளியில் அனுப்பும் போது அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அளிப்பதுடன் அவர்களை கண்காணிப்பது அவசியமாகும்.