பிறந்து 18 மாதம் ஆன குழந்தையை ஆற்றில் தூக்கி எரிந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தில் பேயா டெர்ரெபோன் என்ற ஆறு அமைந்துள்ளது. கடந்த 23-ஆம் தேதி மாலை ஒரு பெண் பிறந்து 18 மாதமே ஆன கைக்குழந்தையை பாலத்தின் மேலிருந்து ஆற்றில் தூக்கி எரிந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆற்றில் தூக்கி எறியப்பட்ட அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த குழந்தையின் தாயை கைது செய்து விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் அவர் ஆஷா ரண்டால்ப் என்பதும், முதலில் எவ்வித காரணம் இன்றி குழந்தையை ஆற்றில் தூக்கி எரிந்தும் தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் நடத்திய கடும் விசாரணையில் அவர் இதேபோல் தனது 8 வயது மற்றும் 6 வயது குழந்தைகள் இருவரையும் தனது வாகனத்தில் விட்டு சென்ற தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் போலீசாருக்கு தகவல் அளித்த நபர்களுக்கு ஆயிரம் டாலர்கள் பரிசாக அறிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து லூசியானா குழந்தைகள் மற்றும் குடும்ப சேவை துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல் தொடர்பாக 2,096 குற்றச்சாட்டுகள் பதிவாகி விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.