Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “முன்னாள் பிரதமர் வாகனத்தில் சிக்கி பெண் பலி”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் முன்னாள் பிரதமரின் வாகனத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் ஐ.ஏ.எஸ் உளவு பிரிவு அமைப்பின் இயக்குனர் ஜெனரலை விமர்சித்து வருகிறார். மேலும் அவரது நியமனம் பற்றி பிரதமருடன் காரசார அறிக்கை மோதல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று 3-வது நாளாக ஹகீக்கி ஆசாதி என்ற பெயரிலான நீண்ட பேரணியை  நடத்தினார். இதனை படம் பிடிப்பதற்காக உள்ளூர்களில் பிரபலம் வாய்ந்த சேனல் 5 என்ற தொலைக்காட்சியின்  பெண் நிபுணர் சடாப் நயீன் என்பவர் சென்றுள்ளார்.

அப்போது இம்ரான் கானின் பிரசார வாகனத்தில் சிக்கிய  அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இம்ரான் கான் தனது பேரணியை ரத்து செய்துள்ளார். மேலும் இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது. இன்றைய தங்களது பேரணியில சடாப் நயீம் என்ற பெண்  விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பற்றி  அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த சோகமும் அடைந்தேன். மேலும் எனது வருத்தங்களை விவரிக்க வார்த்தைகள் எதுவும் இல்லை. இந்த சோக தருணத்தில் அவரது குடும்பத்தினருக்காக வேண்டிக்கொள்கிறேன். இன்றைய எங்களது பேரணியை நாங்கள் ரத்து செய்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |