வாலிபர் தனது காதலி உள்ளிட்ட 5 பேரை சுட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பல இடங்களில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் காதலனுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிற்கும் அவரது காதலனுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அந்தப் பெண் மற்றும் இரண்டு குழந்தைகளையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார் . மேலும் இந்த சத்தம் கேட்டு வந்த இரண்டு பேரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 5 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.