பிரபல மலையாள திரைப்பட இசை அமைப்பாளர் ஜான் வர்கீஸ் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் பிரபலமான ராக் இசைக் கலைஞராண இவர் , கம்மட்டிப்பாடம், ஈடா, உன்னம், புரோஷன், ஒலிப்போரு உள்ளிட்ட பல மலையாள படங்களுக்கு இசையமைத்துள்ளார் .
இடி சங்கதி உள்ளிட்ட சில தெலுங்கு படங்களுக்கும், கார்த்திக் உள்ளிட்ட சில கன்னட படங்களுக்கும் இசையமைத்துள்ளார். திரைப்பட விழாக்களில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். இசை ஆல்பங்களும் வெளியிட்டுள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் அருகே குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜான் வர்கிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 51. ஜான் வர்கி மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.