இளங்கன்று பயமறியாது என்னும் பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதற்குப் பொருள் இளம்பருவத்தில் இருக்கும் துடிப்பில் எதையும் கண்டு பயப்பட மாட்டார்கள் என்பது தான். இந்த பழமொழிக்கு ஏற்றவாறு சிறுமி ஒருவர் மலைப்பாம்பை கைகளில் பிடித்து விளையாடும் திகிலான சம்பவம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என கேள்விப்பட்ட நமக்கு இந்த காட்சி கொஞ்சம் ஆச்சரியமாகவும் அதே நேரம் அதிகமாக பயமாகவும் இருக்கின்றது. பொதுவாக பாம்பு இனங்களை விஷத்தன்மை கொண்டது. அப்படி இருக்கும்போது எந்தவித பயமும் இல்லாமல் அந்த குழந்தை பாம்பை பாடாய்படுத்துகின்றது இந்த திகிலான வீடியோவை பலரும் ஆர்வமாகவும் அதிர்ச்சிடனும் பார்த்து வருகின்றார்கள்.
View this post on Instagram
இன்ஸ்டாகிராமில் snakemasterexotics இன்னும் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் அரியானா என்னும் ஒரு சிறுமி மலைப்பாம்புடன் விளையாடுகின்றார். ஒரு பெரிய அறையில் அந்த சிறுமி அமர்ந்திருக்க எதையோ கையில் பிடித்து இழுப்பது போல் தெரிகின்றது. அதன் பின் தான் தெரிகிறது அது ஒரு பெரிய மலைப்பாம்பு என்று கருப்பு நிறத்தில் நீண்டிருக்கும் அந்த மலை பாம்பின் வால் பகுதியை அந்த சிறுமி தனது இரு கைகளாலும் பிடித்து இழுக்கின்றது. அந்த மலைப்பாம்பு அங்குள்ள கட்டில் அடிப்பகுதிக்குள் செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் அந்த சிறுமி பாம்பை இழுத்துக் கொண்டிருக்கின்றார். இதே போல் அந்த சிறுமி பலவிதமான பாம்புகளுடன் விளையாடும் காட்சி அந்தப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கின்றது. பாம்பின் புகைப்படங்கள் வீடியோக்களை கண்டாலே நடுங்கும் நமக்கு இந்த சிறுமி அசால்ட் ஆக பாம்புடன் விளையாடுவது ஆச்சரியமாக இருக்கின்றது. மேலும் இந்த வீடியோவிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியானதாக கமெண்ட் தெரிவித்து வருகின்றார்கள்.