Categories
உலக செய்திகள்

OMG: “பாகிஸ்தானை குறி வைக்கும் சுனாமி”… எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்….!!!

பாகிஸ்தான் நாடு அதிக நிலநடுக்க பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் வருடம் வரை 4,039 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதேபோன்று சுனாமி, புயல்கள் மற்றும் பலத்த மழை ஆகிய பாதிப்புகளும் ஏற்படகூடிய நாடாக இருக்கிறது.
கடந்த 1945-ம் ஆண்டு பாகிஸ்தானின் கடலோரம் மற்றும் ஈரான், இந்தியா மற்றும் ஓமன் நாடுகளை சுனாமி தாக்கியதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் ஐ.நா. வளர்ச்சி திட்டத்துடன் இணைந்து நடத்திய நிகழ்வில் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி  பாகிஸ்தானில் சுனாமி பேரிடர் ஏற்படக்கூடிய ஆபத்துள்ளது. மேலும் குவாடர் துறைமுகம் மற்றும் அந்நகரம் சுனாமியால் நீரில் மூழ்ககூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கராச்சி நகரில் ஒன்று முதல் 2 கி.மீ. வரையிலான கடலோர பகுதிகள் பாதிப்படையகூடும். அதுமட்டுமின்றி சிந்து கடலோர பகுதியும் சுனாமி அச்சுறுத்தல் இலக்காக இருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |